News December 4, 2024
குமரி அணைகளுக்கு வரும் நீர் வரத்து இன்றைய விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 350 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 173 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 365 பெருஞ்சாணி அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 325 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Similar News
News December 13, 2025
குமரி: மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

களக்காடு SN பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த லிங்கம், ராணி தம்பதியினர் குமரி கடற்கரை சாலையில் டீ கடை நடத்தி வந்தனர். இருவரும் குடும்ப தகராறில் பேசாமல் இருந்தனர். இந்நிலையில் கடையில் இருந்த ராணியிடம் லிங்கம் சிலருடன் வந்து தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ராணியை லிங்கம் கத்தியால் குத்திவிட்டு ஓடினார். காயமடைந்த ராணி GHல் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை.
News December 13, 2025
குமரில் ராணுவவீரர் உடல் கருகி உயிரிழப்பு!

புதுக்கடை கீழ்குளம் பொத்தியான்விளை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ். ஓய்வுபெற்ற ராணுவவீரர். கடந்த வாரம் பைக்கில் கடைக்கு செல்வது தொடர்பாக மனைவிக்கும் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோஸ் பைக் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த போது அவர் உடலில் தீ பற்றியது. உடல் கருகிய நிலையில் காயமடைந்த அவர் GHல் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை.
News December 12, 2025
1,53,664 விண்ணப்பங்கள் திரும்பி வரவில்லை – ஆட்சியர்

குமரி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவப்பணிகள் முடிவடைந்த நிலையில், மொத்தமாக 1,53,664 படிவங்கள் மட்டுமே திரும்ப பெறப்படாமல் உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் அழகுமீனா தெரிவித்தார். இது விநியோகிக்கப்பட்ட மொத்த படிவங்களின் 9.65% ஆகும்.
15.92 லட்சம் வாக்காளர்களில் 14.39 லட்சம் பேரின் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


