News November 25, 2024
குமரி அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை 292 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 169 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 501 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 610 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 422 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Similar News
News November 18, 2025
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு பிப்.28 அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4426 செலுத்தி ரூ.88525 இழப்பீடாகவும், மரவள்ளிக்கு ரூ.1470 செலுத்தி ரூ.29393 இழப்பீடாகப் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குமரி: 2002 வாக்காளர் பட்டியல் அறிய இணையதளம் முகவரி

தமிழகம் முழுவதும் சிறப்பு விரைவு வாக்காளர் திருத்தம் நடந்து வருகிறது. 2002ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் விபரங்களை எளிய முறையில் அறிய : https://kanyakumari-electors.vercel.app/ என்ற இணையதளத்தை அணுகலாம். என மாவட்ட ஆட்சியர் ஆர் அழகுமீனா இன்று தெரிவித்துள்ளார்.