News January 2, 2025
குமரியை உலக தரத்திற்கு உயர்த்தபணிகள்- ஆட்சியர் தகவல்

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு குமரி சுற்றுலாதளத்தினை உலகதரத்திற்கு உயர்த்தும் வகையில் குமரியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குமரிக்கு வரும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டம் மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் காலை சூரிய உதயம், சூரியன் மறைவு ஆகியவற்றை கண்டுகளிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
குமரி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் இங்கே<
News July 9, 2025
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் கடைபிடிக்கும் 10 ஊராட்சிகளை ஊக்குவித்து தமிழக அரசு சமூக நல்லிணக்க விருதுடன் தலா 1 கோடி ரூபாய் வழங்க உள்ளது. சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் https://tinyurl.com/Panchayataward என்ற இணையதளத்தில் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
+2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு

குளச்சல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். மாலையில் அப்பகுதியில் உள்ள டைப்ரைட்டிங் பயிற்சி செல்லும்போது அங்கு திருமணமான வாலிபரான தனிஷ்(25) என்பவரிடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் தனிஷ் மாணவியை அருகில் உள்ள தோப்பில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் படி குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் தலைமறைவான தனிஷை தேடி வருகின்றனர்.