News April 23, 2025
குமரியில் 93 மெட்ரிக் டன் நெல் விதைகள் விநியோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பு சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் நெல் விதைப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முதல் பருவ கன்னிப்பூ சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் 93 மெட்ரிக் டன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் ஜென்கின் பிரபாகர் நேற்று கூறினார்.
Similar News
News November 10, 2025
குமரியில் பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு

குமரியில் இருந்து மங்களூருக்கு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை புறப்பட இருந்தது. அப்போது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வன அதிகாரி திவ்யா அதில் ஏறச் சென்ற போது ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு ஓடிவிட்டார். ரயில்வே பாதுகாப்பு படையினரும் போலீசாரும் இணைந்து அந்த நபரை தேடி வந்தனர் அப்போது அங்கு பதுங்கி இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை கைது செய்தனர்.
News November 10, 2025
குமரி: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

குமரி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): -1
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 10, 2025
குமரி: ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்க கோரி வழக்கு

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்படும் விசைப்படகுகளுக்கு மாதந்தோறும் கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. மற்ற துறைமுகங்களில் வசூலிக்கும் தொகையை ஒப்பிடும்போது இது அதிகம். எனவே கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்து துறைமுகத்திலும் ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்க வேண்டும் என மதுரை ஐகோர்டில் தூத்தூர் சேசடிமை மனு தாக்கல் செய்தார். இதற்கு அதிகாரிகள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டனர்.


