News March 28, 2025
குமரியில் 22,000 பேர் 10th பொதுத்தேர்வு எழுதுகின்றனர்

தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 28) 10th பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. குமரியில் 122 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 22 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 234 பள்ளிகளுக்கு 66 மையங்களும், 4 தனித்தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 21 பள்ளிகளுக்கு 49 மையங்களும் 3 தனித்தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க!
Similar News
News November 28, 2025
குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.3ம் தேதி (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
News November 28, 2025
குமரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

குமரி மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News November 28, 2025
குமரி: உங்கள் பெயர் நீங்கிவிடும்.. கடைசி வாய்ப்பு

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை சுமார் 65 ஆயிரம் விண்ணப்பங்கள் திரும்ப வழங்கப்படாமல் இருப்பதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். படிவங்களை திரும்ப வழங்க நவம்பர் 30 கடைசி நாளாகும். இல்லையெனில் 2026 வாக்காளர் பட்டியலில் இருந்து திரும்பி வழங்காத வாக்காளர் பெயர்கள் தானாக நீங்கிவிடும் என தெரிவித்துள்ளார்.


