News March 28, 2025

குமரியில் 207 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவில்லை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 122 மையங்களில் இந்த தேர்வு இன்று நடைபெற்றது. மொத்தம் 22, 208 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 22,001 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 207 பேர் தேர்வு எழுதவில்லை என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News October 23, 2025

குமரி: மழைக்காலங்களில் இந்த App தேவை – ஆட்சியர் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் இயற்கை வானிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் TN-Alert App ஐ கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐ ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயனடையலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.30 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கு பதில் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

உழவரைத் தேடி வேளாண்மை முகாம் அறிவிப்பு

image

உழவரை தேடி வேளாண்மை முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் தோறும் 4 வருவாய் கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 24.10.2025 அன்று செண்பகராமன்புதுார், வெள்ளிசந்தை. ஆற்றூர் ஆகிய 3 கிராமங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையிலும், குமாரபுரம், சைமன் காலனி ஆகிய 2 கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலும் நடைமுறை இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!