News April 14, 2025
குமரியில் 2.68 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 920 பேருக்கு புற்றுநோய் தொடர்பான ஆரம்ப கட்ட பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 6,538 பேருக்கு புற்றுநோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 133 பேர்க்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளதாக ஆட்சியர் அழகு மீனா வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 19, 2025
நாகர்கோவிலின் அடையாளம் நாகராஜா கோயில்

இந்தியாவிலேயே மூலவர் நாகராஜா சிலை உள்ளது இங்கு மட்டும் தான். கருவறையில் நாகராஜா இருக்கும் இடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணல் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மணல் ஆடி – மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை – ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறுவது அதிசயத்தக்க ஒன்றாகும். நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்கள் வருவது வழக்கம் *ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
நாகர்கோவிலில் 4,024 போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்கு

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் போக்குவரத்து ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 17 நாட்களில் மட்டும் நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4,024 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மது போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சாகசத்தில் ஈடுபடுதல் இந்த வழக்குகள் அதிகமாகும்.
News April 19, 2025
குமரி மாவட்டத்திற்கு 255.05 டன் கைத்தறி நூல் கொள்முதல்

கன்னியாகுமரி மாவட்ட நெசவாளர்களுக்காக கைத்தறி நூல் மத்திய அரசின் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலம் 255.05 டன் கைத்தறி நூல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நூலுக்கு மத்திய அரசு 15 சதவீதம் வரை மானியமாக வழங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.