News December 31, 2024

குமரியில் 1500 போலீஸ் பாதுகாப்பு

image

இன்று 2024 ஆம் ஆண்டு முடிவடைந்து 2025 ஆம் ஆண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்காக 1500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 2 ஷிப்டுகளாக அவர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.

Similar News

News July 6, 2025

நாகர்கோவில் எம்எல்ஏ கோரிக்கை நிறைவேறியது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் “மினி டைடல் பார்க்” அமைப்பதற்காக
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் MR காந்தி தமிழக சட்டமன்றத்தில்
21-03-2025 அன்று கோரிக்கை வைத்தார். அதை தமிழக அரசு பரிசீலனை செய்து அதற்கான ஒப்புதல்களை இன்று வழங்கி இருக்கிறது. இதைஅடுத்து எம்.ஆர்.காந்திக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News July 5, 2025

குமரியில் 7 வருவாய் ஆய்வாளர்கள் துணை தாசில்தாராக பதவி உயர்வு

image

திருவட்டார் முதுநிலை ஆய்வாளர் சாந்தி தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும் நாகர்கோவில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் அருள் கல்குளம் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும் ஆட்சியர் அலுவலக ஐ பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிரபா இ பிரிவு தலைமை உதவியாளராகவும் இன்று நியமிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 7 பேர் வருவாய் ஆய்வாளர்கள் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

News July 5, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை.5) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை 43.05 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை 71.65 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை 13.42 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை 13.51அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 482 கனஅடி, பெருஞ்சாணிக்கு 187 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

error: Content is protected !!