News December 31, 2024
குமரியில் 1500 போலீஸ் பாதுகாப்பு

இன்று 2024 ஆம் ஆண்டு முடிவடைந்து 2025 ஆம் ஆண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்காக 1500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 2 ஷிப்டுகளாக அவர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.
Similar News
News December 10, 2025
குமரி: ஓடும் பஸ்ஸில் 9 பவுன் நகை பறிப்பு

முதப்பன் கோடு ஓய்வு பெற்ற ஆசிரியை ரோசம்மாள் (74). நேற்று (டிச.9) வெட்டுவென்னி கிறிஸ்தவ ஆலயத்திற்கு பிரார்த்தனை செய்ய சென்று விட்டு மதியம் முக்கூட்டுகல் செல்லும் பஸ்ஸில் ஏறினார். அப்போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கிய போது கழுத்தில் இருந்த 9 பவுன் நகையை யாரோ அபேஸ் செய்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து அருமனை போலீசில் அளித்த புகார் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 9, 2025
குமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவருக்கு சிறை

நாகர்கோவில் சகாய நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (56) இவர் கடைக்கு சென்ற 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த மகிளா நீதிபதி தனசேகரன், செல்வராஜுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
News December 9, 2025
குமரி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

குமரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <


