News April 6, 2025
குமரியில் 120 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் – ஆட்சியர்

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 120 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும்11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்காக இம்மாதம் 22 ஆம் தேதி வரை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Similar News
News January 3, 2026
குமரி: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை ரெடி!

குமரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
News January 3, 2026
குமரி: குளத்தில் மிதந்த ஆண் சடலம்…

காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (70). இவர் கடந்த 31-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் வேலைக்கு சென்று இருக்கலாம் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைத்த நிலையில் நேற்று (ஜன.2) அவரது உடல் அந்தப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மிதந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 3, 2026
குமரி: அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பி விபரீத முடிவு!

மார்த்தாண்டம் அருகே இலவுவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (60). இவரது அண்ணன் இறந்துவிட்டதால் மன வேதனையில் பால்ராஜ் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் நேற்று (ஜன.2) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


