News April 6, 2025

குமரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் டெலிகாலர் பிரிவில் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 19 – 59 வயதிற்குட்பட்டவர்கள் மே.31 க்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News November 10, 2025

குமரியில் பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு

image

குமரியில் இருந்து மங்களூருக்கு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை புறப்பட இருந்தது. அப்போது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வன அதிகாரி திவ்யா அதில் ஏறச் சென்ற போது ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு ஓடிவிட்டார். ரயில்வே பாதுகாப்பு படையினரும் போலீசாரும் இணைந்து அந்த நபரை தேடி வந்தனர் அப்போது அங்கு பதுங்கி இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை கைது செய்தனர்.

News November 10, 2025

குமரி: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

image

குமரி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): -1
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு க்ளிக் <<>>செய்யுங்க. SHARE

News November 10, 2025

குமரி: ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்க கோரி வழக்கு

image

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்படும் விசைப்படகுகளுக்கு மாதந்தோறும் கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. மற்ற துறைமுகங்களில் வசூலிக்கும் தொகையை ஒப்பிடும்போது இது அதிகம். எனவே  கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்து துறைமுகத்திலும் ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்க வேண்டும் என மதுரை  ஐகோர்டில் தூத்தூர் சேசடிமை மனு தாக்கல் செய்தார். இதற்கு அதிகாரிகள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டனர்.

error: Content is protected !!