News April 8, 2025
குமரியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நிறுவனத்தில் சேவை ஆலோசகர், டெலிகாலர், ஆட்டோமேஷன் நிபுணர் உள்ளிட்ட பிரிவுகளில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும் நிலையில் 18 – 59 வயதிற்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன்.4 க்குள் இங்கே <
Similar News
News December 21, 2025
குமரி: கண்காணிப்பில் சிறப்பு ரோந்து படைகள்

கிறிஸ்மஸ் பண்டிகை டிச.25 அன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 5 துணை சரகங்களிலும் சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூட்ட நெரிசலில் திருட்டுகள் நடைபெறுவதை தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News December 21, 2025
குமரி: இலவச வீட்டு மனை வேண்டுமா?..

குமரி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News December 21, 2025
நாகர்கோவில்: எம்.எல்.ஏ உட்பட 180 பேர் மீது வழக்கு!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயிர் நீத்த பூரணசந்திரன் ஆன்மா சாந்தியடைய வேண்டி நாகர்கோவில் வடசேரி, கோட்டார், அஞ்சுகிராமம் உட்பட மாவட்டத்தில் 8 இடங்களில் தீபங்கள் ஏற்றி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பாஜக உறுப்பினர் எம் ஆர் காந்தி உட்பட 180 பேர் மீது காவல்துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


