News April 4, 2025
குமரியில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் உற்பத்தி நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட இயந்திர ஆப்ரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
Similar News
News November 22, 2025
குமரி: பொக்லைன் இயந்திரம் மோதி டிரைவர் பலி

முளகுமூடு பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் ஆனந்தராஜ் (24). நேற்று முன்தினம் சுருளகோடு கஞ்சிக்குழி கிரஷரில் மணல் பாரம் ஏற்ற டெம்போவை நிறுத்தினார். அப்போது மணலை அள்ளி டெம்போவில் போட்டுக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரத்தின் பக்கெட் ஆனந்தராஜ் மீது மோதி டெம்போவுடன் சேர்ந்து நசுங்கிய நிலையில் படுகாயமடைந்தார். ஆனந்தராஜை மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் இறந்து விட்டதாக கூறினர். குலசேகரம் போலீசார் விசாரணை.
News November 22, 2025
குமரி: G.H ல் இவை எல்லாம் இலவசம்!

குமரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் குமரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04652-275089 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க..
News November 22, 2025
குமரி: CSIF வீரர் தற்கொலை

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே களியல் சிறுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் மத்திய பாதுகாப்பு படை (CSIF) வீரர் சுனில் ராஜ் (39). இவருக்கும் மனைவி சிவராணிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், அவரது மனைவி வீட்டில் சென்று பார்த்த போது சுனில் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


