News October 14, 2024
குமரியில் மழை அவசரகால எண்கள் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொது மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 1077, 231077, 9384056205 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News July 11, 2025
குமரி: பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை

கன்னியாகுமரி அருகே உள்ள பொட்டல்குளம் லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (33). இவர் இன்று மதியம் லெட்சுமிபுரத்தில் மர்ம நபர்களால் நடுரோட்டில் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இக்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News July 11, 2025
ஊரக வேலை உறுதித் திட்ட குறை கேட்கும் முகாம்

குமரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு பணி புரியும் மாற்றுத்திறனாளிகள் திட்டம் தொடர்பான குறைகளை தீர்க்கும் பொருட்டு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முன்னிலையில் குறை கேட்கும் முகாம் நடைபெற உள்ளது. ஜூலை.15 அன்று பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இம்முகாம் நடைபெறும் என ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை.11) நீர்மட்ட விவரம் பேச்சிப்பாறை அணை 41.56 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 70.60 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 13.19 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 13.28 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 225 கனஅடி, பெருஞ்சாணிக்கு 24 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.