News March 9, 2025
குமரியில் பொது இடத்தில் மது குடித்த 193 பேர் கைது

குமரி மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், பூங்காக்கள், மேம்பாலங்கள், நீர்நிலைகரையோரம் உட்பட பொது இடங்களில் பலரும் மது அருந்துவது அதிகரித்து வருகிறது. மது போதையில் அடிதடி உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் நடக்கிறது. இதனை தடுக்க மாவட்ட போலீசார் பொது இடத்தில் மது அருந்துவோரை கைது செய்து வருகின்றனர்.அதன்படி கடந்த 8 நாட்களில் மட்டும் பொது இடங்களில் மது குடித்ததாக மொத்தம் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News March 10, 2025
குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#இன்று(மார்ச் 10) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை மருத்துவமனையில் மருத்துவரை நியமிக்க கோரி அரசு ரப்பர் கழக தோட்டத் தொழிலாளர்கள் 90வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#பகல் 2 மணிக்கு கலத்துப் பாடு ஸ்ரீ கண்டம் சாஸ்தா கோவிலில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் நடைபெறுகிறது.#இரவு 9:30 மணிக்கு மண்டைக்காடு கோவிலில் பெரிய சக்கர தீவட்டி நிகழ்ச்சி நடக்கிறது.
News March 10, 2025
மண்டைக்காடு கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வந்து குவித்த வண்ணம் உள்ளனர். விடுமுறை தினமான நேற்று(மார்ச் 9) கடற்கரை பகுதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
News March 9, 2025
நாகர்கோவில் கொடூர கொலைக்கு காரணம் ரூ.150

நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த வேலு எரித்து கொலை செய்யப்பட்டது, தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி திருமலாபுரத்தைச் சேர்ந்த சுதன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்த போது, மது குடிப்பதற்காக 150 ரூபாய் வேலு பாக்கெட்டில் இருந்து எடுத்ததாகவும், அவர் காட்டிக் கொடுத்து விடுவார் என கல்லால் தாக்கி எரித்துக் கொன்றதாகவும் கூறியுள்ளார். *ரூ.150 க்காக கொலையா? உங்கள் கருத்தை கமெண்ட் பன்னுங்க*