News April 22, 2025
குமரியில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு 34 லட்சம் நிதி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “குமரி மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 34 லட்சம் உத்தேச நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 சென்ட் விவசாய நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பொது பிரிவினருக்கு 26.86 லட்சம், ஆதி திராவிடர் இனத்தவருக்கு 6.80 லட்சம், பழங்குடி இனத்தவருக்கு 0.34 லட்சம் நிதி பெறப்பட்டு உள்ளது” என்றார்.
Similar News
News December 9, 2025
நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் நுள்ளிவிளை பகுதியில் அமைந்துள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அங்கு புதிய பாலம் அமைக்கும் பணி நாளை தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே துறை செய்து வருகிறது. இதனை ஒட்டி திங்கள் சந்தை – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
News December 9, 2025
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் கலந்தாய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு நடைபெற உள்ளது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சித் தலைவருமான அழகு மீனா கலந்தாய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை உட்பட பலர் கலந்து கொண்டனர்.