News November 20, 2024

குமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிக நிறுத்தம்!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று(நவம்பர் 20) கடலில் பயணம் செய்து விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழை நின்ற பிறகு படகு சேவை தொடரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Similar News

News November 20, 2024

அதிமுக நிர்வாகிகளுக்கு தளவாய் சுந்தரம் அறிக்கை

image

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக கள ஆய்வு குழு ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, வார்டு நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூராட்சி, ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தளவாய் சுந்தரம் எம்எல்ஏ இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 20, 2024

குமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் குமரி உட்பட நாகை, நெல்லை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News November 20, 2024

நெல்லை: மழை எச்சரிக்கை விடுத்த காவல்துறை!

image

குமரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு மழை எச்சரிக்கை இன்று விடுத்துள்ளது. அதில், மழைக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது மெதுவாகவும், கவனமாகவும் செல்ல வேண்டும். தண்ணீர் சூழ்ந்த இடங்களில் சென்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெள்ளம் சம்மந்தப்பட்ட பொதுமக்களை பயமுறுத்தும் தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்.