News April 2, 2025
குமரியில் கோழி, ஆடு, பன்றி வளர்க்க 50 லட்சம் வரை மானியம்

குமரி மாவட்டத்தில் கோழி, ஆடு, பன்றி வளர்க்க 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதன் மூலம் புதிய கோழிப் பண்ணைகள், செம்மறியாடு, வெள்ளாட்டுப் பண்ணைகள் அமைக்கலாம். தகுதி உடையவர்கள் https://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 6, 2025
கணவரை கத்தியால் குத்தியதாக மனைவி மீது வழக்கு

அஞ்சுகிராமத்தை சேர்ந்த துரைராஜிடம் அவரது மனைவி சம்பள பணத்தை கேட்டுள்ளார். இதில், அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் கணவர் துரைராஜை அவரது மனைவி நெஞ்சில் கத்தியால் குத்தினாராம். இதில் துரைராஜ் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 6, 2025
வேண்டிய பலன் அருளும் ஆதிகேசவ பெருமாள் கோயில்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் 87ஆவது திவ்யதேசம். 16,008 சாளக்கிராமத்தால் ஆன பெருமாள், மேற்கு நோக்கி 22 அடியில் அருள்பாலிக்கிறார். இங்கு 12 சிவன் கோயில்களையும் தரிசித்து, பெருமாளையும் வணங்கினால் மறுபிறப்பு கிடையாது. வேண்டிய பலன்களைத் தரும் பெருமாள். புரட்டாசி, பங்குனி மாதங்களில் சூரிய ஒளி மூலவர் மீது படுவது சிறப்பு. இதை *SHARE* பண்ணுங்க.
News July 6, 2025
புதிய 25 வழித்தட பேருந்துகள் விவரம்

புதிய வழித்தட பேருந்துகள் விவரம்:
38A நாகர்கோவில்-புத்தன்துறை, 15L நாகர்கோவில்-யாக்கோபுரம், 15V நாகர்கோவில்-வடக்கன்குளம், 4BV நாகர்கோவில்-காற்றாடிவிளை, 38P நாகர்கோவில்-பிலாவிளை, 14E/V நாகர்கோவில்-முட்டம், 4H நாகர்கோவில்-திடல், 33C நாகர்கோவில்-கண்ணன்பதி, 4N நாகர்கோவில்-சுருளகோடு, 5/A நாகர்கோவில்-குளச்சல், 5D/PHS நாகர்கோவில்-வாணியாகுடி, 3 நாகர்கோவில்- கண்ணன்குளம்.