News April 23, 2025

குமரியில் குற்ற செயல்கள் குறைவு: எஸ்பி தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதத்தை ஒப்பிடு கையில் இந்த ஆண்டின் கடந்த நான்கு மாதங்களில் கொலை, கொள்ளை மற்றும் விபத்து உயிரிழப்புகள் 60% குறைந்துள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் நேற்று கூறினார்.

Similar News

News November 23, 2025

குமரி: காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் கூட்டத்தைக் கையாளும் வகையில், கன்னியாகுமரி மற்றும் பனாரஸ் (காசி) இடையே (ரயில் எண் 06001/06002) சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் பயணிகள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News November 22, 2025

பேச்சிப்பாறை அணையில் 500 கன அடி உபரி நீர் திறப்பு

image

குமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 44 அடி நீர்மட்டம் உள்ளதை தொடர்ந்து அணையில் இருந்து இன்று (நவ.22) 500 கன அடி உபரி நீர் அவசரகால மதகுகள் மூலம் திறந்து விடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இதனால் கால்வாய் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

News November 22, 2025

குமரி: வங்கியில் வேலை! APPLY NOW

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க: இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!