News November 23, 2024

குமரியில் இன்று மாலை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

வங்க கடலில் இருந்து ஈரப்பத காற்று குமரி மாவட்ட மலைகளின் மீது மோதுவதாலும், அரபிக் கடல் பகுதியில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் தரைக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் முறிவை ஏற்படுத்தி இன்று(நவ.,23) மாலை கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் இந்த மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 28, 2025

குமரி: கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியீடு

image

குமரி ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பு:- தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தாலோ, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலோ, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தலோ வருவாய் மற் றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை 1077, 04652 231077, 9384056205 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE!

News October 28, 2025

குமரி: அறுவடை இயந்திரத்தால் வாலிபருக்கு நேர்ந்த சோகம்

image

கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. நெல் அறுவடை இயந்திரத்தை நேற்று சுத்தம் செய்த கொண்டிருந்த வாலிபர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News October 28, 2025

குமரி: நாற்காலியில் சிக்கிய 1¼ வயது குழந்தை

image

குமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள குழித்தோடு பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரது 1¼ வயது மகன் கேசங்கின் கால், பிளாஸ்டிக் நாற்காலியின் குழாய் வடிவிலான காலின் துவாரத்தில் சிக்கியது. சமையல் செய்து கொண்டிருந்த தாய், சத்தம் கேட்டு ஓடி வந்து மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து வந்த தக்கலை தீயணைப்பு வீரர்கள், நாற்காலியின் அடிப்பகுதியை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!