News August 10, 2024
குமரியில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம்

குமரி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்காக அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் இன்று (ஆக.10) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.இந்த முகாமில் ரேஷன் அட்டையில் உள்ள குறைகளை தீர்க்க பொதுமக்கள் மனு அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 30, 2025
குமரி: 40 பேர் மீது குண்டாஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை இதுவரை 40 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதான கடும் நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News November 30, 2025
நாகர்கோவில் மக்களுக்கு இறுதி வாய்ப்பு

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாக இன்று (நவ. 30) ஒருநாள் மட்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உங்கள் வீடுகளுக்கு கணக்கீட்டு படிவங்களை பெற வருவார்கள். மேலும், வரும் திங்கள் முதல் பூர்த்தி செய்த தங்களது கணக்கீட்டு படிவங்களை நீங்கள் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். SHARE
News November 30, 2025
சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான மாதிரி தேர்வு

குமரி மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர்(SI) தேர்வுக்கான 24வது முழு மாதிரி தேர்வு 30.11.25 காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள வெற்றிப்பாதை படிப்பகத்தில் வைத்து நடைபெறும்.
இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுவதாக மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.


