News October 9, 2024
குமரியில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று(அக்.,9) ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கீழகோதையாரில் 36 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கல்லார் பகுதியில் 32, அப்பர் கோதையார் 29, பாலமோர் 21.2, அடையாமடை 18.2, சுருளோடு 13.2, பெருஞ்சாணி 12.8, சிற்றாறு 12.4 குழித்துறை 12.4 மி.மீ மழை பெய்துள்ளது.
Similar News
News December 11, 2025
SI தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நாகர்கோவில் TNUSRB நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு மாவட்ட அளவிலான இலவச முழு மாதிரித்தேர்வு வரும் செவ்வாய்க்கிழமை (16.12.2025 ) நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வைத்து காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல் தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
குமரி: சிறுமியிடம் அத்துமீறிய எலக்ட்ரீஷியன் கைது

கருங்கல்-மாங்கரை எலக்ட்ரீஷியன் பால்ராஜ் (57) மனைவி வீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தி வந்தார். 2 நாட்களுக்கு முன் இரவு டியூஷனுக்கு வந்த 3ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்துச்செல்ல பெற்றோர் வராததால் பால்ராஜ் சிறுமியை வீட்டுக்கு கொண்டு விடச்செல்லும் வழியில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்தார். நேற்று குளச்சல் மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர்.
News December 11, 2025
குமரி: புது ரேஷன் கார்டு வேணுமா? APPLY செய்வது EASY

1. <
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!


