News March 24, 2025
குமரியில் ஆவின் பால் கொள்முதல் 6000 லிட்டராக சரிவு!

குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக மாடுகளுக்கு பால் சுரக்கும் தன்மை குறைந்து, 9000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 6000 லிட்டராக குறைந்துள்ளது. மீதமுள்ள பாலை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
குமரி: கடல் அலையில் தூக்கி வீசப்பட்டு இளைஞர் பலி!

குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ரெஜின் ஜாஸ்பின் (34). உறவினர்களுடன் நேற்று முன் தினம் குளச்சல் வந்தார். குளச்சலில் இருந்து 9 பேர் சேர்ந்து படகில் பயணம் செய்தனர். மிடாலம் பகுதியில் படகு கரை இறங்கும் போது பெரிய அலை படகில் மோதியது. இதில் படகில் இருந்த ரெஜின் தூக்கி வீசப்பட்டு கடலில் விழுந்தார். மருத்துவமனை கொண்டு சென்ற பொழுது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். குளச்சல் போலீசார் விசாரணை.
News December 27, 2025
அன்னபூரணி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனம் மடத்தில் அன்னபூரணி அம்மன் சன்னிதானத்தில் மார்கழி மாத வெள்ளிக்கிழமை வளர்பிறையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கார தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீஅன்னபூரணி அம்மனை வழிபட்டனர்.