News April 14, 2025
குமரியின் அருமையான சுற்றுலா தலம்

முருகப் பெருமானின் மனைவி வள்ளி தேவி நீராடியதன் காரணமாக இந்த இடத்திற்கு வள்ளி சுணை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடம் தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் வேளி மலை குமாரகோயில் உள்ளது. கோயில் நடை காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை திறந்திருக்கும். வள்ளிச்சுனைக்குச் செல்ல விரும்புவோர், தக்க பாதுகாப்புடனும் வழிகாட்டலுடனும் சென்று வரலாம். * நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News December 20, 2025
குமரி: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

குமரி மாவட்ட வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,53,373 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
குமரி: 625 லிட்டர் மண்ணெண்ணைய் பதுக்கல்

சாமியார் மடம் அருகே கல்லு விளையில் உள்ள ஒரு தோட்டத்தில் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் திருவட்டாறு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையில் போலீசார் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 33 கேன்களில் 625 லிட்டர் மண்ணெண்ணை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர்.
News December 20, 2025
குமரி: தீக்குளித்து பரிதாப பலி

அருமநல்லூரை சேர்த்தவர் பச்சையம்மாள் (75). இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால், சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். இதில், படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


