News May 16, 2024

குமரிக்கு ரெட் அலர்ட்!

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2025

குமரி: கடிதம் எழுதிவைத்துவிட்டு முதியவர் தற்கொலை

image

ஆசாரிப்பள்ளம் சந்தனராஜ் (67) 32 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் கட்டிட கான்ட்ராக்டராக வேலை பார்த்து, சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 17ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ரோஸ் நகர் கொட்டகையில் நவ 18ம்தேதி தூக்கிட்டு இறந்த நிலையில் அவரது உடலை ஆசாரிபள்ளம் போலீசார் மீட்டனர். சொத்து, மன ரீதியான பிரச்சினை தொடர்பாக தற்கொலை செய்வதாக அவர் எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர்.

News November 20, 2025

கன்னியாகுமரியில் மதில் சுவரில் மோதிய பேருந்து

image

கன்னியாகுமரியில் அய்யப்ப சாமி பக்தர் வாகனம் மதில் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் 20 நிமிடத்தில் வாகனத்தை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் நடைபெற்று வருகிறது. இதனால் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஸ், டெம்போ டிராவல்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

News November 20, 2025

பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களிடம் சோதனை

image

கன்னியாகுமரியில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முதல் இந்த சோதனை தொடங்கியுள்ளது.

error: Content is protected !!