News January 24, 2025
குன்னூர்: வியாபாரிகள் சங்கத்துக்கு சீல் வைப்பு

குன்னுார் மார்க்கெட்டில், 20.74 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்த, மார்க்கெட் வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. கமிஷனர் இளம்பரிதி உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சையது இப்ராகிம் மற்றும் ஊழியர்கள், ‘சீல்’ வைத்து நோட்டீஸ் ஒட்டினர். அதிகாரிகள் கூறுகையில், ‘அதிகபட்சமாக வாடகை பாக்கி வைத்த வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
Similar News
News November 23, 2025
நீலகிரி மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, வன விலங்குகள் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க வனத்துறை சார்பில் 1800-425-4343 என்ற உதவி எண் பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் வனவிலங்கு தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம். SHARE பண்ணுங்க!
News November 23, 2025
நீலகிரி: WhatsApp-ல் வரும் ஆபத்து.. உஷார்!

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 22, 2025
நீலகிரி கலெக்டர் உத்தரவு

நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள தேவாலாவில் அமைந்து உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்கள் மீது ஆபத்தான கட்டிடம் இடிந்த விழுந்தது. இதனால் ஆபத்தான கட்டிடங்களை அகற்ற கோரி முன்னாள் எம்.எல்.ஏ திராவிடமணி கலெக்டரிடம் கேட்டுக் கொண்டார். எனவே கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆபத்தான கட்டிடங்களை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.


