News August 26, 2024
குன்னூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையை அடுத்து நீலகிரியில் குவிந்த சுற்றுலா கூட்டம், சுற்றுலா தலங்களில் அலைமோதி வருகின்றன. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சி முனை, ஊட்டி, பைக்காரா படகு இல்லங்கள் என கூட்டம் நிறைந்து காணப்பட்டன. குறிப்பாக குன்னூர் ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது.
Similar News
News December 12, 2025
நீலகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கீடு செய்ய, மாவட்டம் மற்றும் வட்டார அளவில் வெள்ளக் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்து வயல் ஆய்வு நடத்தி, 33% மேல் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
News December 12, 2025
டிச.15 கடைசி; அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

தமிழக அரசின் சமுதாய நல்லிணக்க விருதான கபீர் புரஸ்கார் விருதுக்கு, போலீசார், ஆயுதப்படை வீரர்கள், போலீசார், அரசுப்பணியாளர்கள் தவிர பிறர் விண்ணப்பிக்கலாம். ஜாதி பிரச்னைகள், கலவரங்கள், வன்முறைகள் போன்ற சூழலில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://awards.tn.gov.in இணையதளத்தில் டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்.
News December 11, 2025
நீலகிரி எம்.பி ஆ.ராசா மத்திய அமைச்சருடன் சந்திப்பு

கோயம்புத்தூர்–ஊட்டி NH 181 சாலை மிக மோசமான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இன்று (டிச.11) நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஒன்றிய அரசின் ரூ-8698.88 லட்சம் மதிப்பிலான பராமரிப்பு பணிக்கான அனுமதி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


