News January 22, 2025
குன்னம் : உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்

“உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் குன்னம் வட்டத்திற்குட்பட்ட, துங்கபுரம் ஊராட்சியில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குழந்தைகள் நல மையம், சமையற் கூடம், துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இன்று (22.01.2025), மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு செய்தார்.
Similar News
News November 19, 2025
பெரம்பலூர்: போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை

பெரம்பலூர், புதிய பேருந்து நிலையத்திற்குள், போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை, போக்குவரத்து போலீசார் நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசார் முன்கூட்டியே, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்குள், இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 19, 2025
பெரம்பலூர் : ஆட்சியராக சாலைகளில் தேங்கிய மழைநீர்

பெரம்பலூர் மாவட்டம், ஆட்சியராகம் சுற்றியுள்ள அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானம் செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் அரசு அதிகாரிகள், வேளாண்மை துறை, வனத்துறை, பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல பேர் கடந்து செல்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலையை சீர் செய்ய விளையாட்டுமைதான உறுப்பினர்கள் மாற்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 19, 2025
பெரம்பலூர் மாவட்டம் இரவு நேர ரோந்து பணி விபரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம், என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


