News January 22, 2025
குத்துச் சண்டையில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து

மாவட்ட அளவிலான குத்துச் சண்டை போட்டியில், செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி பிரியதர்ஷினி, 40 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இம்மாணவியை, பள்ளியின் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News December 2, 2025
தி.மலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருவண்ணாமலையில் நாளை( டிசம்பர் 3) கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தி.மலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுகட்ட டிசம்பர் 13 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News December 2, 2025
தி.மலையில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

சேத்துப்பட்டு மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், சேத்துப்பட்டு, நெடுங்குணம், வேப்பம்பட்டு, கோனமங்கலம், வெளக்கம்பட்டு, மருத்துவம்பாடி, இடையங்குளத்தூர், கரிப்பூர், நம்பேடு, உலகம்பட்டு, கங்கைசூடாமணி, முடையூர், ஆத்துரை, தேவிகாபுரம், ஓதலவாடி, தேவிமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளது. ஷேர் பண்ணுங்க
News December 2, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (டிச.1) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


