News June 3, 2024
குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் பேருந்து நிலையம்

ராயக்கோட்டை பேருந்து நிலையம் கட்டி சுமார் 30 வருடங்களாகிறது. அது பராமரிப்பின்றி செயல்பட்டு வந்ததால் பேருந்து செல்லக்கூடிய தரை முழுவதும் சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பேருந்து டயர்கள் விரைவில் பழுதாகும் நிலை ஏற்படுகிறது. அதோடு பயணிகளும் அச்சத்தோடு செல்கின்றனர். இதனை சீரமைக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News May 8, 2025
அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 7, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே.1) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News May 7, 2025
கிருஷ்ணகிரியில் தொழிலாளர் தினம் கொண்டாட்டம்

சென்னை சாலையில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல அலுவலகம், கிருஷ்ணகிரி கிளை சார்பில் தொழிலாளர் தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. LPF தொழில் சங்கம் நிர்வாகிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் இணைந்து தொழிலாளர் கொண்டாடினர். கொடி ஏற்றி மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.