News May 3, 2024

குண்டர் தடுப்பு சட்டம்-நீதிமன்றம் அதிரடி

image

பேஸ்புக் நட்பில் இருந்தவர் வன்கொடுமை செய்த புகாரில், குண்டர் சட்ட நடவடிக்கை தவறாக பயன்படுத்தப்படுவதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டவர் மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரிய மனு மீதான நேற்றைய விசாரணையில், குண்டர் சட்ட கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்பு அதன் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், இந்த வழிமுறைகளை உள்துறை செயலர் பரிசீலித்து சுற்றறிக்கையாக வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

Similar News

News December 11, 2025

மதுரை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

மதுரை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News December 11, 2025

BREAKING: மதுரையில் 4 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

image

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஏறத்தாழ 4 இலட்சம் வாக்காளர்கள் இறந்தவர்கள், இரட்டை வாக்கு, வீடு மாற்றம், SIR படிவங்களை சமர்ப்பிக்காதது போன்ற காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். இதில் ஒன்றரை இலட்சம் பேர் உயிரிழந்தது காரணமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News December 11, 2025

தமிழக ஆளுநர் நாளை மதுரை வருகை

image

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தின் 57வது பட்டமளிப்பு விழா நாளை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ரவி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்க உள்ளார். இதற்கென ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

error: Content is protected !!