News September 14, 2024
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., பரிந்துரையின் பேரில், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.கோபிநாத் 2.குமார் ஆகியோர் இன்று (13.09.2024) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News November 5, 2025
ராணிப்பேட்டை: 4 ஆண்டுகளில் 8 கோடி இலவச பயணங்கள்

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். “மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு அரசு பேருந்துகளில் மகளிர் இலவச பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 8 கோடி பயணங்கள் மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மகளிர் மேற்கொண்டுள்ளனர்”. என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
ராணிப்பேட்டையில் 1,70,000 மகளிருக்கு உரிமை தொகை

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் கடந்த 26 மாதங்களாக சுமார் 1 இலட்சத்து 70 ஆயிரம் மகளிர், ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மூலம் பயன்பெற்று வருகின்றனர்”. என தகவல் தெரிவித்துள்ளது.
News November 5, 2025
ராணிப்பேட்டை: 16,000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!

தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு துறை நேற்று (நவ.04) சமூக வலைதளத்தில் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட சுமார் 16 ஆயிரம் மாணவர்கள், ஒவ்வொரு மாதம் தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத் தொகை பெற்று பயன்பெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.


