News February 15, 2025
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது

சிவகங்கை அண்ணாமலை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மாரிமுத்து (25). திருப்புவனம் காஞ்சிரங்குளம் காலனி முருகன் மகன் சக்தி கணேஷ் (19) கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். இருவரையும் மதுரை சிறையில் நேற்று அடைத்தனர்.
Similar News
News December 9, 2025
மடப்புரம் இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல்

திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (25), அருகில் உள்ள முடி திருத்தகத்தில் அமா்ந்திருந்தபோது அங்கு வந்த கும்பல் ஒன்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடர்பாக ஆதிராஜேஸ்வரன், சஞ்சய் உள்ளிட்ட 12 பேரை கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
சிவகங்கை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<
News December 9, 2025
மானாமதுரை: டூவீலர் விபத்தில் சிறுவன் பலி

மானாமதுரை அருகே மூங்கில் ஊரணியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் அய்யனார் (17), நேற்று இருசக்கர வாகனத்தில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் வந்த போது சர்வீஸ் ரோட்டிலிருந்து மேம்பாலத்திற்கு ஏற போடப்பட்டிருந்த இரும்பிலான படிக்கட்டில் எதிர்பாராத விதமாக மோதியதில் தலை மற்றும் முகத்தில் காயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


