News October 24, 2024
குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு

ஒலையனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட R.R. குப்பம் கிராமத்தைச் சேர்ந்த துரை அரசன் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) என்பவர் மீது கடந்த 24-09-2024 அன்று உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 18, 2025
கள்ளக்குறிச்சி: சாப்பிட சென்றவர் மயங்கி விழுந்து பலி!

கள்ளக்குறிச்சி: அகரக்கோட்டாலம் பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து (51) கூலி வேலை செய்து வருகிறார். நேற்று அவர் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது, ஹோட்டல் வாசலிலேயே திடீரெனெ மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பச்சமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 18, 2025
கள்ளக்குறிச்சி: தந்தையின் பேராசையால் மகள் விபரீத முடிவு!

பல்லவாடியைச் சேர்ந்த லோகநாதன் (49), ஆன்லைன் நிறுவனம் ஒன்று அதிக லாபம் தருவதாக கூறியதை நம்பி தனது பணம் மற்றும் ஊர் பொதுமக்களிடம் வாங்கிய பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால், அந்த நிறுவனம் அவரிடம் மோசடி செய்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வரத் தொடங்கினர். இதனால் மனமுடைந்த அவரது மகள் தேன்மொழி (18) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 18, 2025
கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.17) இரவு முதல் நாளை (டிச.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


