News April 19, 2025
குண்டடத்தில் மாயமான பெண் பிணமாக மீட்பு

குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியை சேர்ந்த சீரங்க சாமி என்பவரின் மனைவி
விசாலாட்சி (62).மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் திடீரென மாயமானார். குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர் அப்போது உப்பாறு அணையில் விசாலாட்சியை பிணமாக மீட்டனர்
Similar News
News December 14, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த கன்ஷ்யாம் குமார் என்ற நபரை, போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கஞ்சா சாக்லேட் 1. 5 கிலோ மற்றும் 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
News December 14, 2025
திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

திருப்பூர், அய்யம்பாளையத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோயில். மிகவும் சக்திவாய்ந்த அய்யனை வழிபட்டால் தீராத நோய்களும், தோஷங்களும் நீங்குமாம். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண், பாம்பு விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்டதாம். அய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண்னை சிறிது எடுத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் தெளித்தால் அங்கு விஷ ஜந்துக்கள் போன்றவை அண்டாது என்பது நம்பிக்கை.
News December 14, 2025
திருப்பூர் வாகன ஓட்டிகள் உடனே Check பண்ணுங்க!

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு போக்குவரத்து விதி மீறும் சம்பவங்கள் நடைபெறுவதால், நகரப் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலமாக விதி மீறுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. உங்கள் வாகனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை செக் செய்ய இங்கே <


