News May 23, 2024
குட்டையில் மூழ்கிய கல்லூரி மாணவன் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே லிங்கம்மநாயக்கனூர் புதூருக்கு விடுமுறைக்கு கெங்கம்பாளையத்தைச் சேர்ந்த வினோத் என்ற தொழிற்பயிற்சி கல்லூரி மாணவன் வந்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வினோத் பரிதாபமாக குட்டைக்குள் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News April 21, 2025
திருப்பூர்: ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி!

திருப்பூர் ஊத்துக்குளி இடையே ரெயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மொரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சபரிநாதன் என்பது தெரியவந்தது.
News April 21, 2025
திருப்பூர் வட்டாட்சியர் அலுவலர்கள் எண்கள்

▶️திருப்பூர் (வ) வட்டாச்சியர் 0421-2200553. ▶️அவினாசி வட்டாச்சியர் 04296-273237. ▶️ பல்லடம் வட்டாச்சியர் 04255-253113.▶️தாராபுரம் வட்டாட்சியர் 04258-220399. ▶️ காங்கேயம் வட்டாட்சியர் 04257-230689. ▶️ உடுமலைபேட்டை வட்டாட்சியர் 04252-223857. ▶️ மடத்துக்குளம் வட்டாட்சியர் 04252-252588. ▶️ திருப்பூர் (தெ) வட்டாட்சியர் 0421-2250192.▶️ ஊத்துக்குளி வட்டாட்சியர் 04294-260360. மக்களே SHARE பண்ணுங்க.
News April 21, 2025
பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட கலெக்டர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று கலெக்டர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அதன்படி இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.