News May 17, 2024
குட்கா விற்ற கடைகளுக்கு அதிரடி சீல்

ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் உத்தரவின் பேரில் சிப்காட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிப்காட் பகுதியில் 6 கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூபாய் 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
Similar News
News March 6, 2026
ராணிப்பேட்டை: +2 தேர்வு நேரத்தில் நாட்டு வெடி வீச்சு

தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வு மையம் அமைக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்டோா் தோ்வு எழுதி வருகின்றனா். இந்நிலையில் மாணவா்கள் சிலரிடையே ஏற்பட்ட தகராறில் அவா்களில் சிலரே நாட்டுவெடியை மற்ற மாணவா்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினா். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் புரிசையை சோ்ந்த மாணவர் நாகராஜன்(16) தலையில் காயமடைந்தாா். இது குறித்து தக்கோலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் .
News March 6, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (மார்ச் 05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
ராணிப்பேட்டை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


