News September 13, 2024
குட்கா விற்பனை செய்த 5 கடைகளுக்கு சீல்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் மற்றும் போலீசார் வாலாஜா, ரத்தினகிரி, கொண்டபாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதிகளில் இன்று ரெய்டு நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 5 கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.
Similar News
News December 17, 2025
ராணிப்பேட்டை: பசுமை சாம்பியன் விருது அறிவிப்பு!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2025 மற்றும் ரூ.1 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் https://tnpcb.gov.in (அ) https://ranipet.nic.in/ என்ற இணையதளம் மூலம் வரும் ஜன.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
News December 17, 2025
ராணிப்பேட்டை ஆட்சியரின் எச்சரிக்கை!

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(டிச.16) சமூக நலன் & மகளிர் உரிமைத் தொகை பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து, அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.பின், மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.மேலும், தகுந்த நடவடிக்கை மூலம் தண்டனை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
News December 17, 2025
ராணிப்பேட்டை: இனி வரி செலுத்துவது ஈஸி!

ராணிப்பேட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!


