News March 20, 2025
குட்காவை விற்ற 1,236 கடைகளுக்கு ரூ.3.20 கோடி அபராதம் விதிப்பு

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் தடைச் செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 1,236 கடைகளுக்கு ரூபாய் 3.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
Similar News
News March 31, 2025
சேலத்தில் CSK முன்னாள் வீரர்!

சேலம் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியின் ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், ரஞ்சிக் கோப்பை வீரருமான கே.பி.அருண் கார்த்திக், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய மாணவ, மாணவியர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
News March 31, 2025
சேலம் ஐடிஐ-யில் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

சேலம் ஐடிஐ-யில் 3 மாத குறுகிய கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறுவதாகவும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 18ம் தேதிக்குள் தங்களது டிசி, மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் மற்றும் 4 புகைப்படங்களுடன் கோரிமேட்டில் உள்ள ஐடிஐயை நேரடியாக தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார். இதை SHARE செய்யுங்கள்.
News March 31, 2025
வாழப்பாடியில் ஏப்.5- ல் ஜல்லிக்கட்டு!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம், வாழப்பாடி, சிங்கிபுரத்தில் வரும் ஏப்ரல் 05- ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது. 500-க்கும் மேற்பட்ட காளைகள், 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில், விழா மேடை, வாடிவாசல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு கமிட்டியினர் செய்து வருகின்றனர்.