News April 1, 2025
குடும்ப ஐஸ்வர்யம் மேம்பட சிறந்த கோயில்

ராணிப்பேட்டை மாவட்ட சோளிங்கரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் உள்ளது. இறைவன் 24 நிமிடங்களுக்குள் அவதரித்ததால், இந்த மலையில் 24 நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்த தம்பதிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 5, 2025
ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பால சரஸ்வதி (60), இவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு சப்தகிரி ரயிலில் வந்து கொண்டிருந்தனர். ஏப்ரல் 3 இரவு அரக்கோணம் ரயில் நிலையம் 5வது நடைமேடையில் ரயில் நின்று புறப்படும் போது அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் பால சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். ரயில்வே போலீசில் நேற்று புகார் தெரிவித்தார்.
News April 5, 2025
7 சவரன் செயினை பறித்த சுடிதார் கொள்ளையன்

பனப்பாக்கத்தை சேர்ந்தவர் பள்ளி தலைமை ஆசிரியை அபிதா 49. இவர் வியாழக்கிழமை இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சுடிதார் அணிந்து வந்த கொள்ளையன், அபிதா அணிந்திருந்த ஏழு சவரன் செயினை பறித்துச் சென்றான். இதுகுறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று எஸ்பி விவேகானந்த சுக்லா, டிஎஸ்பி ஜாபர்சித்திக் பார்வையிட்டனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
News April 5, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 4 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. வாலாஜா ராணிப்பேட்டை ஆற்காடு சிப்காட் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100