News May 16, 2024
குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை

தேனி மாவட்டம் கம்பம் அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தோப்பில் சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைந்தது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை சோதனையிட்டபோது அதில்3 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசார் விசாரணையில், கேரளாவை சேர்ந்த 3 பேர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
Similar News
News September 19, 2025
தேனியில் ரூ.12.25 லட்சம் வரை மானியம் பெறலாம்

தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் மாம்பழ கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக ரூ.12.25 லட்சம் மானியமாக வழங்க உள்ளதாகவும், இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு விவசாயக் தங்கள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
தேனி: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <
News September 19, 2025
ஆந்திராவிலிருந்து தேனிக்கு டூவீலரில் 14 கிலோ கஞ்சா கடத்தல்

தேவாரத்திலிருந்து ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்துக்கு டூவீலரில் சென்று ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை வாங்கி கொண்டு கடத்தி வந்த அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் 32, கோம்பை ஈஸ்வரனை 40, போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தேனியில் இருந்து விசாகபட்டினத்திற்கு டூவீலரிலேயே 1200 கி.மீ., துாரம் குறுக்கு வழித்தடங்களில் சென்று சில்லரை விற்பனையில் கிடைக்கும் கஞ்சாவை வாங்கி கடத்தி வந்தது தெரிந்தது.