News April 15, 2024
குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் நூதன பிரச்சாரம்

ஈரோடு இளைஞர் அணி நிர்வாகி முஹம்மத் அர்ஷத் கான் தலைமையில், சேலம் திமுக பேச்சாளர் சதீஷ்குமார் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து நூதன முறையில் ஜக்கம்மாள் சொல்றா… ஜக்கம்மாள் சொல்றா… இந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் சொல்கின்ற எம்.பிக்கு வாக்களியுங்கள் ஜக்கம்மாள் சொல்றா… ஜக்கம்மாள் சொல்றா என வாக்கு சேகரித்தார்.
Similar News
News November 20, 2025
ரூ.25 லட்சம் மானியம் ஈரோடு கலெக்டர் அறிவிப்பு!

வேளாண்மை, கால்நடை மற்றும் மீன்வளர்ப்பு ஆகிய துறைகள் இணைந்து வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. புதிய நிறுவன வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வரை, மற்ற நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படவுள்ளது. இதனை www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் ஈரோடு கலெக்டர் கந்தசாமி அறிவித்து உள்ளார். ஷேர் பண்ணுங்க!
News November 20, 2025
பெருந்துறை தொழிலாளி உடல் அழுகிய நிலையில் மீட்பு!

பெருந்துறை துடுப்பதி சுள்ளிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (53). விசைத்தறி தொழிலாளி. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பழனிசாமி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 20, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்-100க்கும், சைபர் கிரைம் எண்-1930க்கும், குழந்தைகள் உதவி எண்-1098 எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.


