News November 24, 2024
குடியாத்தம் எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு

குடியாத்தம், நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இதனை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 4, 2025
வேலூர்: திருப்பதி சென்றவர்களுக்கு விபத்து!

வேலூர்: மகாராஷ்டிரா மாநிலம் பூனாவை சேர்ந்த பக்தர்கள் கேரளாவில் ஐயப்ப சுவாமி தரிசனம் செய்து விட்டு திருப்பதி செல்கையில், வேலூர் காட்பாடி காவல் நிலையம் எதிரே சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவர் படுகாயமடைந்த நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News December 4, 2025
வேலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 4, 2025
வேலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<


