News March 24, 2025
குடியாத்தம் அருகே குட்டையில் மூழ்கி மூதாட்டி பலி

குடியாத்தம் நெட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் அம்சம்மாள் (70). இவர் அதே கிராமத்தில் உள்ள குட்டையில் நேற்று மாலை அவரது கால்களை கழுவுவதற்காக தண்ணீரில் இறங்கி உள்ளார். அப்போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
வேலூர்: ஆன்லைன் மோசடி-ரூ.26 லட்சத்தை பறிகொடுத்த பெண்!

வேலூரை சேர்ந்த 35 வயது பெண்ணின் செல்போனுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஒரு லிங்க் வந்துள்ளது. இதை உண்மை என நம்பிய அவர் போலியான பங்கு சந்தை வெப்சைட்டில் 26 லட்சம் செலுத்தி உள்ளார். அவர் செலுத்திய பணத்துக்கு கிடைத்த லாபத்தை எடுக்க முயன்ற போது எடுக்க முடியவில்லை. இதுகுறித்து பெண் ஆன்லைன் மூலம் அளித்த புகாரின் பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
வேலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ!

வேலூரை அடுத்த அரியூர் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் 17 வயது சிறுமியை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் 17 வயது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அரசு மருத்துவர்கள் அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது நேற்று (டிச.4) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
வேலூர்: அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மர்ம நபர்!

வேலூர்: குடியாத்தம் அருகே, பாண்டிச்சேரியில் இருந்து வந்த அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற முரளி (50) என்பவர், காட்பாடி நான்கு முனை கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரால் தாக்கப்பட்டார். காயமடைந்த ஓட்டுநர் முரளி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து உதயகுமார் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


