News January 23, 2025

குடியரசு தின விழா மாவட்ட வருவாய் அலுவலர் அறிக்கை

image

தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி ஞாயிறு காலை 8.10 மணிக்கு தென்காசி மாவட்டம், இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே. கமல் கிஷோர், தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்” என தெரிவித்தார்.

Similar News

News January 9, 2026

தென்காசி பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி – APPLY!

image

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் மத்திய அரசு அங்கிகரிக்கப்பட்ட இலவச தையல் பயிற்சி மையம் ஸ்ரீ பவானி தையல் பயிற்சி மையத்தில் பேட்ச் வாரியாக வகுப்பு தொடங்கப்படுகிறது. இதில் 18 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டும் அனுமதி. பயிற்சி காலம் முடிந்தபின் மாணவிகளுக்கு மத்திய அரசால் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு: 6385380815, 9445793675 இந்த எண்களில் அழைத்து பயன் பெறலாம். SHARE IT

News January 9, 2026

தென்காசியில் 35 கிராம் தங்கசெயின் பறித்தவர் கைது

image

தென்காசி, பாவூர்சத்திரம் ரயில் நிலையம் 1வது நடைமேடையில் நடந்து சென்ற பாவூர்சத்திரம் தெற்கு காந்தி நகரை சேர்ந்த ரத்தினசாமி மனைவி தனபாக்கியம் என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 35 கிராம் தங்கச் முறுக்கு செயினை பறித்து சென்றனர். செயின் பறித்து தலைமறைவாக இருந்த பாவூர்சத்திரம் சின்னத்தம்பி நாடார் பட்டியை சேர்ந்த சிவா என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்து தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.

News January 9, 2026

தென்காசி மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

தென்காசி மாவட்டத்தில் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க தென்காசி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புகையில்லா போகி கொண்டாடுவோம் சுற்றுச் சூழலை பேணிக் காப்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!