News January 24, 2025

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் காரைக்குடி மாணவிகள்

image

இந்தியா நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவினை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு விழா அணிவகுப்புக்கும் சென்னை மெரினாவில் நடைபெறும் குடியரசு விழா அணிவகுப்புக்கும், அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடியில் உள்ள 9ஆவது பட்டாலியனைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவி ஜீவகப்பிரியா,நிர்மலா தேவி தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க உள்ளனர்.

Similar News

News November 1, 2025

காரைக்குடியில் மின்தடை ரத்து

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் (01.11.2025) நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காரைக்குடி துணை மன்நிலையத்தில் நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே நாளைய தினம் எப்போதும் போல் மின்சாரம் இருக்கும் என காரைக்குடி உதவி மின் பொறியாளர் அறிவித்துள்ளார்.

News October 31, 2025

சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News October 31, 2025

சிவகங்கை கலெக்டரின் அதிரடி உத்தரவு…2 பேர் சஸ்பெண்ட்

image

சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் சமூக நீதி பள்ளி மாணவிகள் விடுதி உள்ளது இங்கு 60க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி உள்ளனர்.இந்நிலையில் அந்த விடுதிக்கு கடந்த அக்-28 தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி திடீர் ஆய்வு செய்தபோது பணியாளர்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வார்டன் முத்து ராணி, சமையலர் இருவரையும் ஆட்சியர்பணியிடை நீக்கம் செய்தார்.

error: Content is protected !!