News December 25, 2024
குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்வான மாணவர்கள்
டெல்லியில் நடைபெறும் 2025 வருடம் குடியரசு தின அணிவகுப்புக்கு காரைக்கால் மாவட்டத்திலிருந்து 3 என்எஸ்எஸ் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரை இன்று சந்தித்தனர். மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் காரைக்கால் மாவட்டத்திற்கு இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பெருமை சேர்த்திடுமாறு பாராட்டினார்.
Similar News
News January 14, 2025
சுருக்குமடி வலைக்கு தடை -மீன்வளத்துறை எச்சரிக்கை
புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் புதுச்சேரி கடல் பகுதிகளில் ஹூக்கான் (எ) அக்டி முறை (சுருக்குமடி வலை) மீன்பிடி முறையை பயன்படுத்த கூடாதுஎன எச்சரிக்கை விடப்படுகிறது. மீறினால், மீனவர்களின் நலத்திட்ட உதவிகள் நிருத்தப்படும். மேலும் அவர்கள் மீது மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் 2008ன் படி நடவடிக்கை எடுப்பதோடு, மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்
News January 14, 2025
ஸ்டோர் கீப்பர் பணியிடங்கள் நிரப்ப அரசு அறிவிப்பு
புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 13 ஸ்டோர் கீப்பர் பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு, தற்போது பணி செய்யும் பல்நோக்கு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருக்க வேண்டும்
News January 13, 2025
1,29,886 பயனாளிகள் பயன் – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடைந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளுக்கு ஈடாக தலா ரூ.1,000/- வீதம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது இதன் மூலம் சுமார் 1,29,886 பயனாளிகள் பயன் பெற்றனர் என்று அவர் தெரிவித்தார்.