News January 24, 2025
குடியரசு தினத்தன்று மதுபான கடைகள் மூடல்

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்/பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில்(FL2) செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்(FL3) செயல்படும் மதுக்கூடங்கள் வரும் (26.01.2025) குடியரசு தினத்தன்று மதுபான உரிமத்தளங்களை மூட (Dry day) உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 15, 2025
கோவை: வாக்காளர் திருத்தம் எளிதாக அறியலாம்!

கோவை மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 15, 2025
இணைய நிதி மோசடிகள் குறித்து கோவை காவல்துறை விழிப்புணர்வு

கோவை காவல்துறை, இணைய வழி நிதி மோசடிகளைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. அதில் மக்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், தெரியாத மின்னஞ்சல்களைத் திறக்காமலும், பாதுகாப்பான இணைய தளங்களில் மட்டுமே பரிவர்த்தனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in மூலம் புகார் அளிக்கலாம்.
News November 15, 2025
கோவை: RIP சிந்து!

கோவை சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மோப்ப நாய் பிரிவில், சிந்து(13) என்ற பெண் லேப்ரடார் இன மோப்பநாய் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. 8 ஆண்டுகள் வெடிகுண்டு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட மோப்ப நாய் சிந்து உயிரிழந்ததை அடுத்து, சிட்டி போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காவல் துறை மரியாதையுடன் சிந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.


