News January 22, 2025

குடியரசு தலைவருக்கு அமைச்சர் அழைப்பு

image

மணப்பாறையில் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை சர்வதேச அளவிலான சாரண, சாரணீய ஜாம்போரி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அழைப்பு விடுத்தார்.

Similar News

News December 18, 2025

திருச்சி: பண்டிகை கால சிறப்பு ரயில் அறிவிப்பு

image

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து திருச்சி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் வரும் 28, 29 மற்றும் ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 18, 2025

பஞ்சப்பூர்: கனரக வாகன முனையம் புதிய டெண்டர் அறிவிப்பு

image

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.110.97 கோடி மதிப்பீட்டில் கனரக வாகன முனையம் கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. இதில் உள்ள கடைகளை வாடகைக்கு விடுவதற்காக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை டெண்டர் விடப்பட்ட போதும் போதிய வரவேற்பு இல்லை. இந்நிலையில் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் கடைகளுக்கான புதிய டெண்டர் விடப்பட்டு, வாகன முனையம் செயல்பாட்டிற்கு வரும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 18, 2025

திருச்சி: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

திருச்சி மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1.<> இங்கு க்ளிக் செய்து<<>> உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க.

error: Content is protected !!