News April 10, 2025

குடிபோதையில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து

image

திருவள்ளூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி, நேற்று (ஏப்ரல் 9) குடிபோதையில் காமராஜர் சிலை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுனில் என்பவரிடம் ரூ.20 கடனாக கேட்டுள்ளார். சுனிலிடம் பணம் பெற்ற பொன்னுமணி, ‘கஞ்சா எங்கு கிடைக்கும்’ எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், கத்தியால் பொன்னுமணியை கை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார். போலீசார், சுனிலை கைது செய்தனர்.

Similar News

News December 1, 2025

திருவள்ளூர்: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க

News December 1, 2025

திருவள்ளூர்: இருவேறு விபத்துகளில் 2 முதியவர்கள் பலி!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 2முதியவர்கள் உயிரிழந்தனர். கவரைப்பேட்டை அருகே பைக்கில் சென்ற அகமது உசேன் (65) என்பவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அதேபோல், ஆர்.கே.பேட்டை அருகே சாலையில் நடந்து சென்ற ராமலிங்கம் (70) என்பவர் பைக் மோதியதில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 1, 2025

திருவள்ளூர்: காதல் திருமணம்-மாப்பிளையை பொளந்த பெற்றோர்!

image

அரக்கோணத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் முடித்து திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த மணமகனின் தாயார், மாற்று சமூகப் பெண்ணை மணந்த ஆத்திரத்தில், மனைவியின் கண்முன்னே மகனை சரமாரியாகத் தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!